Sunday, August 12, 2012


இணையப் பக்கங்களை பிடிஎப் கோப்பாக சேமிக்க



பிடிஎப்(PDF) பரவலாக உபயோகிக்கப்படும் கோப்பு வடிவம். தகவல்களை பிடிஎப்(PDF) வடிவில் இணையத்தில் பகிர்ந்து வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். பிடிஎப் ரீடர் உள்ள எவருமே இந்த கோப்புகளை படித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் காணும் இணையதளங்கள், இணையப் பக்கங்களை நீங்கள் ஆன்லைனில் இல்லாத போது படித்துக் கொள்ள பிடிஎப் கோப்பாக மாற்றி உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமாக எளிதில் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கான சிறந்த சேவையை நீண்ட நாட்களாக தேடி கொண்டிருந்தேன்.

பல்வேறு இணையதளங்கள் இது போன்ற சேவையை வழங்கினாலும் திருப்திகரமாக இல்லை. சில சேவைகளில் படங்கள் சரியாக தெரிவதில்லை. சிலவற்றில் தமிழ் எழுத்துருக்கள் பிரச்சனை.


PDFMyUrl.com இந்த சேவையை வழங்குவதில் இந்த தளம் மிக சிறந்ததாக இருக்கிறது. இணைய பக்கத்தில் உள்ள படங்கள், அதன் வடிவம் முழுமையாக பிடிஎப் கோப்பாக சேமிக்கப்படுகிறது.  URL பகுதியில் நீங்கள் பிடிஎப் ஆக மாற்ற வேண்டிய இணையப் பக்கத்தின் முகவரியை (URL) கொடுத்து என்டர் தட்டினால் போதுமானது. அந்த பக்கம் பிடிஎப் கோப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.

இதனை செயல்படுத்துவதற்கு எளிதான வழி ஒன்றும் இருக்கிறது. இந்த  PDFmyURL  புக்மார்க்லெட் சுட்டியை இழுத்து உங்கள் இணைய உலாவியின் புக்மார்க் டூல்பாரில் விட்டு விடுங்கள் (Drag that PDFmyURL link and drop in bookmark toolbar of your browser like firefox, chrome). பொதுவாக புக்மார்க்லெட் நிறுவுவது எப்படி? என்ற விளக்கத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும். நீங்கள் ஒரு இணையப் பக்கத்தில் இருக்கும் போது இந்த புக்மார்க்லெட்டை கிளிக் செய்தால் போதுமானது. அந்த பக்கம் பிடிஎப்பாக உங்கள் கணினியில் தரவிறக்கப்பட்டு விடும்.

நமது வலைப்பதிவின் இடுகைகளையும் இன் நீங்கள் பிடிஎப் கோப்பாக தரவிறக்கி கொள்ள முடியும். ஒவ்வொரு இடுகையின் கீழே இதற்கான வசதியை அளித்து உள்ளேன். 'Download this post as PDF' என்பதனைக் கிளிக் செய்தாலே போதுமானது. இதன் பிடிஎப் கோப்பு உங்களுக்கு கிடைத்து விடும். இதன் மூலம் இடுகைகளை உங்கள் கணினியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment